உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏமாற்றும் கேப்டன்கள்! தொடரும் வரலாறு..!
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏமாற்றும் இந்திய கேப்டன்கள் பற்றி...
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இதுவரை விளையாடிய இந்திய கேப்டன்கள் இரட்டை இலக்கு ரன்களை அடித்தது இல்லை.
ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய அணியில் பேட்டர்கள் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் அடித்து இமாலய இலக்கை நிர்ணயித்தனர்.
இந்த போட்டியில் பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே கோல்டன் டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
தொடரும் வரலாறு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இதுவரை 4 முறை இந்திய அணி முன்னேறியுள்ளது. இதில், 3 முறை இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆனால், இந்த 4 முறையும் பேட்டிங் செய்த இந்திய கேப்டன்கள் ஒற்றை இலக்கு ரன்களே எடுத்துள்ளனர்.
எம். எஸ். தோனி (எதிரணி பாகிஸ்தான், 2007) - 6 (10)
எம். எஸ். தோனி (எதிரணி இலங்கை, 2014) - 4 (7)
ரோஹித் சர்மா (எதிரணி தென்னாப்பிரிக்கா, 2024) - 9 (5)
சூர்ய குமார் யாதவ் (எதிரணி நியூசிலாந்து, 2026) - 0 (1)