இஷான் கிஷன் அதிரடி: ஆர்சிபிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்று (மார்ச் 28) தொடங்கியது. சின்னசாமி திடலில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் விளையாடியது.
இஷான் கிஷன் அதிரடி; ஆர்சிபிக்கு 202 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இவர்களது விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜேக்கப் டஃபி ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார். அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதீஷ் குமார் ரெட்டியின் விக்கெட்டினையும் ஜேக்கப் டஃபி வீழ்த்தி அசத்தினார். நிதீஷ் குமார் ரெட்டி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, கேப்டன் இஷான் கிஷன் மற்றும் கிளாசன் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் விளாசி அசத்தினார்.
கிளாசன் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இவர்கள் இருவரின் கடினமான கேட்ச்சினையும் சிறப்பாக பிடித்து அசத்தினார் பில் சால்ட்.
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அனிகேத் வர்மா 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
பெங்களூரு தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜேக்கப் டஃபி மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங் மற்றும் சூயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.