ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா. இதனால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து ராஜஸ்தான் 139 ரன்களை சேர்த்தது. இறுதியில் 6 ஓவர்கள் மீதமிருக்க 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை குவித்தது கொல்கத்தா.
கொல்கத்தா அணி முதலிடத்துக்கு முன்னேறியதால் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.
புள்ளிகள் பட்டியல்
| அணிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் | 
| கொல்கத்தா | 5 | 4 | 1 | 8 | +1.058 | 
| சென்னை | 5 | 4 | 1 | 8 | +0.159 | 
| ஹைதராபாத் | 5 | 3 | 2 | 6 | +1.000 | 
| மும்பை | 5 | 3 | 2 | 6 | +0.342 | 
| தில்லி | 6 | 3 | 3 | 6 | +0.131 | 
| பஞ்சாப் | 5 | 3 | 2 | 6 | -0.094 | 
| ராஜஸ்தான் | 5 | 1 | 4 | 2 | -0.848 | 
| பெங்களூர் | 6 | 0 | 6 | 0 | -1.453 | 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.