முகப்பு
ஐபிஎல்

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை: நியூஸிலாந்துக்குப் பறந்தார் கேன் வில்லியம்சன்!

ஏப்ரல் 27 அன்று ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்பார் என... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னையில் இன்றிரவு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருடைய பாட்டி இறந்துவிட்டதால் அவர் உடனடியாக நியூஸிலாந்துக்குச் சென்றுள்ளார். ஏப்ரல் 27 அன்று ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார் புவனேஸ்வர் குமார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 5 ஆட்டங்களில் கேப்டன் பதவியை அவர் வகித்துள்ளார்.

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்சனுக்குப் பதிலாக முகமது நபி அல்லது ஷகிப் அல் ஹசன் ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறக்கூடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.