ஐபிஎல்

பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது சிஎஸ்கே: வாட்சன் அதிரடி ஆட்டம்! (விடியோ)

இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்று தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்த வாட்சன்...

எழில்

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை. முதலில் ஆடிய ஹைதராபாத் 175/3 ரன்களைக் குவித்தது. இரண்டாவதாக ஆடிய சென்னை  வாட்சனின் அபார ஆட்டத்தால் 176/4 ரன்களை எடுத்து வென்றது. 6 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 96 ரன்களை விளாசிய வாட்சன், புவனேஸ்வர் பந்துவீச்சில் அவட்டாகி 4 ரன்களில் சதத்தைத் தவற விட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகள் மூலம் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது சென்னை அணி. ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்களில் 16 புள்ளிகள் பெற்ற அனைத்து அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் சென்னை அணியின் அடுத்தச் சுற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்று தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்த வாட்சன், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

விடியோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கம்மாள் டிரெய்லர்!

விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்? பேட்டிங் பயிற்சியாளர் கேள்வி!

சர்வதேச தேர்தல் நிறுவனத்தின் தலைவராக ஞானேஷ் குமார் டிச. 3-இல் பதவியேற்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.89.53 ஆக நிறைவு!

பாகிஸ்தானில் சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து: 2 பேர் பலி; 18 பேர் காயம்!

SCROLL FOR NEXT