ஐபிஎல்

ஐபிஎல் போட்டி: தொலைக்காட்சி வர்ணனையாளராக அறிமுகம் ஆகும் மனோஜ் திவாரி!

2019 ஐபிஎல் போட்டிக்கான ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை...

எழில்

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2019 (12-வது சீசன் போட்டி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையில் சிஎஸ்கேவும், இந்திய கேப்டன் கோலி தலைமையில் ஆர்சிபி அணிகளும் களமிறங்குகின்றன. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளராக அறிமுகம் ஆகிறார் இந்தியாவுக்காக விளையாடிய பெங்கால் வீரர் மனோஜ் திவாரி.

33 வயது மனோஜ் திவாரி, 12 ஒருநாள், 3 டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த திவாரி, 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். இதையடுத்து 2019 ஐபிஎல் போட்டிக்கான ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

இந்நிலையில் தற்போது புதிய பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் திவாரி. ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தில் வர்ணனையாளராக இணைந்துள்ளார். பெங்காலி, ஹிந்தி என இரு மொழிகளில் தான் வர்ணனை செய்யவுள்ளதாக மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT