ஐபிஎல்

உரிமையாளருக்குச் சிறைத் தண்டனை: இடைக்காலத் தடையை எதிர்கொள்கிறதா பஞ்சாப் ஐபிஎல் அணி?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா, போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக...

எழில்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா, போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக ஜப்பான் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இதையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் அணிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நெஸ் வாடியா, கடந்த மாதம் விடுமுறையைக் கொண்டாட ஜப்பான் சென்றபோது, போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்தக் குற்றத்துக்காக அவருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் விதிமுறையின்படி அணி உரிமையாளர்கள், நிர்வாகிகள் யாரும் பிசிசிஐக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் அவர்கள் சார்ந்துள்ள அணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக சிஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கு இரு ஆண்டுகள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக நெஸ் வாடியாவுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதால் இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பாதிக்கப்படலாம், இடைக்காலத் தடையை எதிர்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ சார்பில் மே 3 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரே... பிரீத்தி முகுந்தன்!

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

SCROLL FOR NEXT