ஐபிஎல்

சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு: தகவல்

சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு...

DIN

சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

59 டெஸ்டுகள், 199 ஒருநாள், 56 டி20 போட்டிகளில் விளையாடிய ஆஸி. வீரர் ஷேன் வாட்சன் கடந்த 2016 மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதையடுத்து 2018-ல் ஷேன் வாட்சனை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதே வருடம் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வெல்ல வாட்சன் முக்கியக் காரணமாக இருந்தார். அதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளுக்காக விளையாடியுள்ள வாட்சன், 145 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் 43 ஆட்டங்கள் சிஎஸ்கேவுக்காக விளையாடியுள்ளார். 

இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவல் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் ஷேன் வாட்சன் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

அணு ஆயு​தம் என்​னும் அச்​சு​றுத்​தல்

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக தொடா் மழை

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

SCROLL FOR NEXT