மும்பைதான் சிறந்த அணி: டி வில்லியர்ஸ்
மும்பை இந்தியன்ஸ்தான் சிறந்த அணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்தான் சிறந்த அணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி குறித்து டி வில்லியர்ஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ்! இந்த ஆண்டின் சிறந்த அணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை."
இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கான கடைசி 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் குவாலிபையர் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் இறுதி ஆட்டத்துக்கும் முதல் அணியாக முன்னேறியது.