முகப்பு
ஐபிஎல்

தவான் அதிரடி சதம்: கடைசி ஓவரில் தில்லி த்ரில் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் அடித்த சதத்தால் தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்

தவான் அதிரடி சதம்: கடைசி ஓவரில் தில்லி த்ரில் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் அடித்த சதத்தால் தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் அடித்த சதத்தால் தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தில்லி தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால், அந்த ஓவர் மைடன் ஓவராக அமைந்தது. அடுத்து களமிறங்கிய அஜின்க்யா ரஹானே 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, தவான் அதிரடி காட்ட கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பாட்னர்ஷிப் அமைத்தார். இதனால், பவர் பிளே முடிவில் தில்லி அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்தது. 

நடு ஓவர்களிலும் ரன் ரேட் குறையாதவாறு அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் தவான். இதன்மூலம், 29-வது பந்திலேயே தவான் அரைசதத்தை எட்டினார்.

தவான் 25 மற்றும் 27 ரன்கள் எடுத்திருந்தபோது, சென்னை வீரர்கள் கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டனர். அரைசதம் அடித்தவுடனும், தவான் கேட்ச்சை தவறவிட்டார் தோனி. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்ட தவான் வெற்றியை தில்லி பக்கம் இழுத்து வந்தார்.

இதனிடையே, ஷ்ரேயஸ் 23 பந்துகளில் 23 ரன்களுக்கு டுவெய்ன் பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸும் அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 11-க்கு கீழ் இருந்து வந்தது. ஆட்டமும் மெல்லமெல்ல சென்னை வசமிருந்து நழுவத் தொடங்கியது.

தில்லி வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களுக்கு 51 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், தவான் கொடுத்த மற்றொரு கேட்ச் வாய்ப்பை ராயுடு தவறவிட்டார். அடுத்த பந்திலேயே ஸ்டாய்னிஸ் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். ஆனால், அடுத்த பந்திலேயே ஸ்டாய்னிஸ் (24 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, கடைசி 4 ஓவர்களில் தில்லி வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டன. சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் தவான் 1 பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்க 11 ரன்கள் கிடைத்தன.

18-வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். முதல் 5 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால், கடைசி பந்தை தவான் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால், கடைசி 2 ஓவரில் தில்லி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டன.

19-வது ஓவரை மீண்டும் சாம் கரண் வீசினார். முதல் பந்திலேயே அலெக்ஸ் கேரி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஓவரை சிறப்பாக வீசிய கரண் 1 வைட் உள்பட 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேசமயம், கடைசி பந்தில் 1 ரன் எடுத்த தவான் 57-வது பந்தில் சதத்தையும் எட்டினார். 

இதையடுத்து, கடைசி ஓவரில் தில்லி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை பிராவோ வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்தை ஜடேஜாவிடம் கொடுத்தார் தோனி.

2 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில், ஜடேஜா ஓவர் வீச வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முதல் வைடாக போக, அடுத்த பந்தில் தவான் 1 ரன் எடுத்தார். அடுத்த 2 பந்துகளில் அக்சர் சிக்ஸர்களைப் பறக்கவிட கடைசி 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அதையும் அக்சர் சிக்ஸருக்குப் பறக்கவிட தில்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் 58 பந்துகளில் 101 ரன்களும், அக்சர் படேல் 5 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர். 


 
 

முழு கட்டுரையைப் படிக்க →