முகப்பு
ஐபிஎல்

சாம் கரன் விலகல்: சிஎஸ்கேவுக்குப் பெரும் பின்னடைவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரௌண்டர் சாம் கரன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரௌண்டர் சாம் கரன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயலர் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், "காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து சாம் கரன் விலகுவது உண்மையில் துரதிருஷ்டவசமானது. அவர் விரைவில் குணமடைய வேண்டும். இதிலிருந்து நிச்சயம் வலிமையுடன் மீண்டு வருவார். அவரது காயம் குறித்து பிசிசிஐயிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது" என்றார்.

"சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். அவர்கள் நிச்சயம் கோப்பையை வெல்வார்கள்" என தொடரிலிருந்து விலகும் சாம் கரன் தெரிவித்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 9 ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிளே ஆஃப் சுற்றை நெருங்கியிருக்கும் நேரத்தில் கரன் விலகியிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →