ஐபிஎல்

ஆர்சிபி தோற்றதால் சமூகவலைத்தளங்களில் அருவருப்பான விமர்சனங்கள்: மேக்ஸ்வெல் வேதனை

DIN

ஆர்சிபி தோற்றதால் சமூகவலைத்தளங்களில் வெளியான அருவருப்பான விமர்சனங்கள் குறித்து தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல வீரர் மேக்ஸ்வெல்.

ஷார்ஜாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. கோலி 39 ரன்கள் எடுத்தார். நரைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கில் 29, நரைன் 26, வெங்கடேஷ் ஐயர் 26 ரன்கள் எடுத்தார்கள். சிராஜ், ஹர்ஷல் படேல், சஹால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்நிலையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றும் கொல்கத்தாவிடம் தோற்றதால் ஆர்சிபி அணியால் இம்முறையும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டது. இதனால் சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ரசிகர்கள் சிலரின் அருவருப்பான கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆர்சிபி அணியின் பிரபல வீரரான கிளென் மேக்ஸ்வெல். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஆர்சிபிக்கு அருமையான பருவம் அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்கு இருக்க வேண்டும் என எண்ணினோமோ அதை அடைய முடியாமல் போய்விட்டது. இந்த வருடப் போட்டியில் அபாரமாக விளையாடியதை இந்தத் தோல்வி மறைத்துவிடாது. சமூகவலைத்தளத்தில் கொட்டப்படும் குப்பை உண்மையிலேயே அருவருப்பாக உள்ளது. நாங்களும் மனிதர்கள் தாம். ஒவ்வொரு நாளும் சிறந்த ஆட்டத்திறனையே வெளிப்படுத்தினோம். இழிவாகப் பேசி அதைப் பரப்புவதை விடவும் பண்பான மனிதராக நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஆதரவளிக்கும் உண்மையான ரசிகர்களுக்கு நன்றி. துரதிர்ஷ்டவசமாக மோசமான மனிதர்களால் மோசமான இடமாக சமூகவலைத்தளங்கள் மாறிவிடுகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தயவுசெய்து அவர்களைப் போல இருக்க வேண்டாம். நீங்கள் சமூகவலைத்தளங்களில் உள்ள என் அணி வீரர்கள், நண்பர்களிடம் மோசமாக நடந்துகொண்டால் பிளாக் செய்யப்படுவீர்கள். மோசமான மனிதராக இருப்பதில் என்ன அர்த்தம்? இதற்கு மன்னிப்பே கிடையாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT