ஐபிஎல்

ஆர்சிபி அணி கேப்டனாக விராட் கோலி சாதித்தது என்ன?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (ஆர்சிபி) கேப்டனாகத் தனது கடைசி ஆட்டத்தை விளையாடி முடித்துவிட்டார் விராட் கோலி.

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (ஆர்சிபி) கேப்டனாகத் தனது கடைசி ஆட்டத்தை விளையாடி முடித்துவிட்டார் விராட் கோலி.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். பிளேஆஃப் சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி அணி தோற்றதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அந்த அணி வெளியேறியுள்ளது. இதையடுத்து விராட் கோலியின் ஆர்சிபி கேப்டன் பயணமும் முடிவடைந்தது. இனி ஐபிஎல் போட்டியில் விளையாடும் வரை ஆர்சிபி அணியில் தொடர்வேன் என உத்தரவாதம் தந்துள்ளார் கோலி.  

2008-ல் யு-19 உலகக் கோப்பையை வென்ற பிறகு ஆர்சிபி அணிக்குத் தேர்வானார் விராட் கோலி. 2013 முதல் அந்த அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி சாதித்தது என்ன?

ஆர்சிபி கேப்டனாக விளையாடிய ஆட்டங்கள்

ஆட்டங்கள் -  140
வெற்றி - 66
தோல்வி - 70
முடிவு இல்லை - 4,
வெற்றி சதவீதம் - 47.17%

ஆர்சிபி கேப்டனாக விளையாடிய ஆட்டங்களில் எடுத்த ரன்கள்

ஆட்டங்கள் -  139 இன்னிங்ஸ்
ரன்கள் - 4871 
சராசரி - 41.99
ஸ்டிரைக் ரேட் - 133.05
சதங்கள் - 5
அரை சதங்கள் - 35

* 2016-ல் விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

* 2011-ல் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அப்போது ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தவர் நியூசிலாந்தைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி. அந்த வருடம் 3 ஆட்டங்களில் மட்டும் கேப்டனாகச் செயல்பட்டார் கோலி. 

* இதுதவிர, 2015, 2020-ம் ஆண்டுகளில் ஆர்சிபி அணி ஃபிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. 

* 2015-ல் 3-ம் இடம் பிடித்தது. 

* கோலி தலைமையில் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT