பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு: கெயிலுக்கு இடமில்லை!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபையில் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியில் அறிமுக வீரர்களாக இஷான் பொரெல், எய்டன் மார்கிரம் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் களமிறங்குகின்றனர். கிறிஸ் கெயில் சேர்க்கப்படவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லீவிஸ் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார்.