சன்ரைசர்ஸ் அணி (கோப்புப் படம்) 
ஐபிஎல்

தந்தை மரணம்: சொந்த ஊருக்குத் திரும்பிய சன்ரைசர்ஸ் அணி வீரர்

23 வயது ரூதர்போர்ட், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 6 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

DIN

தந்தை மரணமடைந்ததால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகி சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் வீரரான ஷெர்ஃபேன் ரூதர்போர்ட்.

ஐபிஎல் 2021 ஏலத்தில் ரூதர்போர்டை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ விலகிய பிறகு ரூதர்போர்டைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. 2019-ல் தில்லி அணிக்காக விளையாடிய ரூதர்போர்ட், 7 ஆட்டங்களில் 73 ரன்கள் மட்டும் எடுத்தார். டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வாகாத ரூதர்போர்ட், சிபிஎல் டி20 போட்டியில் நன்கு விளையாடியதால் அவரைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. 

இந்நிலையில் ரூதர்போர்டின் தந்தை இறந்துவிட்டதால் கரோனா தடுப்புப் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு ரூதர்போர்ட் செல்வதாக சன்ரைசர்ஸ் அணி அறிவித்துள்ளது. 

23 வயது ரூதர்போர்ட், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 6 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

SCROLL FOR NEXT