ஐபிஎல்

சன்ரைசர்ஸிடம் தோற்ற ராஜஸ்தான்: புள்ளிகள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் 10 புள்ளிகளுடன் 4-ம் இடத்துக்கு முன்னேறியிருக்கும்.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி.

துபையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். கேப்டன் வில்லியம்சன் 51 ரன்களும் அபிஷேக் சர்மா 21 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

ஐபிஎல் 2021 போட்டியில் அனைத்து அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. நேற்றைய ஆட்டத்தின் முடிவால் புள்ளிகள் பட்டியலில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ராஜஸ்தான் 6-ம் இடத்திலும் சன்ரைசர்ஸ் கடைசி இடத்திலும் உள்ளன. எனினும் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் 10 புள்ளிகளுடன் 4-ம் இடத்துக்கு முன்னேறியிருக்கும். அந்த வாய்ப்பை சன்ரைசர்ஸ் தடுத்துவிட்டது. 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 10 8 2 16 +1.069
 2. தில்லி 10 8 2 16 +0.711
 3. பெங்களூர் 10 6 4 12 -0.359
 4. கொல்கத்தா 10 4 6 8 +0.322
 5. பஞ்சாப் 10 4 6 8 -0.271
 6. ராஜஸ்தான் 10 4 6 8 -0.369
 7. மும்பை 10 4 6 8 -0.551
 8. ஹைதராபாத்  10 2 8 4 -0.501

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT