ஐபிஎல்

நான் என்ன தவறு செய்தேன்?: குடும்பத்தினரிடம் விசாரித்த சஹால்

ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாறிய பிறகு நிலைமை மாறிவிட்டது.

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் சஹால். இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது அவருடைய நிலைமை வேறாக இருந்தது.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் 7 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார் சஹால். எகானமியும் அதிகம். 8.26. இதனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஹாலுக்கு இடம் கிடைக்கவில்லை. 

ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாறிய பிறகு நிலைமை மாறிவிட்டது. 4 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் சஹார். எகானமி - 5.57 மட்டுமே. பெங்களூர் அணியின் சமீபத்திய வெற்றிகளில் அதிகமாகப் பங்களிக்கிறார்.

இந்த மாற்றம் குறித்து சஹால் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் 3-4 ஆட்டங்களில் நான் சரியாக விளையாடவில்லை. பிறகு வீரர்களிடமும் குடும்பத்தினரிடமும் நான் என்ன தவறு செய்தேன் எனக் கேட்டு விசாரித்தேன். இலங்கையில் விளையாடியபோது என் தன்னம்பிக்கையை மீண்டும் அடைந்தேன். அந்த தன்னம்பிக்கையை இங்கு மீண்டும் பயன்படுத்துகிறேன். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் குறைவான வேகத்தில் பந்துவீசினேன். அதன்மூலம் பேட்டர்கள் கவர் பகுதியில் ஷாட் அடிக்க முயல்வார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ணக் குவியல்... ஸ்ருதி லட்சுமி!

அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? பிஆர் கவாய் நேர்காணல்!

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிர்ப் பலிகள் 17 ஆக அதிகரிப்பு; 6 பேர் மாயம்!

பங்குச் சந்தை: 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்! 26,200 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!!

இந்திய அணியின் தோல்விக்கு யார் பொறுப்பு? கம்பீர் விளக்கம்!

SCROLL FOR NEXT