முகப்பு
ஐபிஎல்

மும்பைக்கு எதிராக 32 பந்துகளில் பட்லர் அரை சதம்

மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் 32 பந்துகளில் அரை சதமடித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
பட்லர் (கோப்புப் படம்)
பகிர்:

மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் 32 பந்துகளில் அரை சதமடித்துள்ளார்.

நவி மும்பையில் நடைபெற்று வரும் மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் காயத்திலிருந்து குணமானாலும் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. ராஜஸ்தான் அணியில் கோல்டர் நைலுக்குப் பதிலாக நவ்தீப் சைனி இடம்பெற்றுள்ளார். 

மும்பை அணி இதுவரை விளையாடிய ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. ராஜஸ்தான் அணி ஓர் ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. 

ஜெயிஸ்வால் 1 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பசில் தம்பி வீசிய 4-வது ஓவரில் பட்லர், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்தார். படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளேயில் ராஜஸ்தான் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் 32 பந்துகளில் அரை சதமடித்தார் பட்லர். 

10 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 64, சஞ்சு சாம்சன் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.