முகப்பு
ஐபிஎல்

9 வருடங்களுக்குப் பிறகு சிஎஸ்கே அணியில் விளையாடும் இலங்கை வீரர்

சிஎஸ்கே அணியில் இதற்கு முன்பு முரளிதரன், கபுகடரா, திலன் துஷாரா, திசாரா பெரேரா, ரந்தீவ், அகிலா தனஞ்ஜெயா, குலசேகரா ஆகிய இலங்கை வீரர்கள் விளையாடியுள்ளார்கள். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் 2013-க்குப் பிறகு ஓர் இலங்கை வீரர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார். 

நவி மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் மார்கோ யான்சென், ஷஷாங் சிங் ஆகியோர் அறிமுகமாகியுள்ளார்கள். தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நடராஜன் இடம்பெற்றுள்ளார்கள். சிஎஸ்கே அணியில் பிரிடோரியஸுக்குப் பதிலாக இலங்கைச் சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்‌ஷனா அறிமுகமாகியுள்ளார்.  முகேஷ் செளத்ரி அணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.

சிஎஸ்கே இதுவரை மூன்று ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் இதுவரை இரு ஆட்டங்களிலும் விளையாடியுள்ளன. இரண்டு அணிகளும் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளன. 

Advertisement

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர் மஹீஸ் தீக்‌ஷனாவை ரூ. 70 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் 2013-க்குப் பிறகு விளையாடும் இலங்கை வீரர், மஹீஷ் தீக்‌ஷனா. 2012-ல் கடைசியாக நுவன் குலசேகரா விளையாடும் 11 பேரில் ஒருவராக இடம்பெற்றார். 2013-ம் ஆண்டு குலசேகராவும் தனஞ்ஜெயாவும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு இப்போதுதான் ஓர் இலங்கை வீரர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார். 

21 வயது தீக்‌ஷினா, இலங்கை அணிக்காக இதுவரை 4 ஒருநாள், 15 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

சிஎஸ்கே அணியில் இதற்கு முன்பு முரளிதரன், கபுகடரா, திலன் துஷாரா, திசாரா பெரேரா, ரந்தீவ், அகிலா தனஞ்ஜெயா, குலசேகரா ஆகிய இலங்கை வீரர்கள் விளையாடியுள்ளார்கள். 

சிஎஸ்கே அணியில் இலங்கை வீரர்கள்

கபுகடரா (2008)
முரளிதரன் (2008, 2009, 2010)
திலன் துஷாரா (2009, 2010)
திசாரா பெரேரா (2010)
குலசேகரா (2011, 2012, 2013)
சூரஜ் ரந்தீவ் (2011, 2012)
அகிலா தனஞ்ஜெயா (2013)
மஹீஷ் தீக்‌ஷனா (2022)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments