ஐபிஎல்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: லக்னெள அணிக்கு 166 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 166 ரன்கள் லக்னெள அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

DIN

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் லக்னெள அணிக்கு  166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 20வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற லக்னெள அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லர், படிக்கல் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 

பட்லர் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அதற்கு அடுத்து வந்த சாம்சன், டூசன் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து வந்த ஹிட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

எனினும் மறுபுறம் களமிறங்கிய அஷ்வின்(28), ரியான் பிராக்(8), ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. இதனால் லக்னெள அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT