ஐபிஎல்

முதல் வெற்றியை மனைவிக்கு அர்ப்பணித்த ஜடேஜா

சிஎஸ்கே கேப்டனாகத் தனக்குக் கிடைத்த முதல் வெற்றியை மனைவிக்கு அர்ப்பணித்தார் ஜடேஜா.

DIN

சிஎஸ்கே கேப்டனாகத் தனக்குக் கிடைத்த முதல் வெற்றியை மனைவிக்கு அர்ப்பணித்தார் ஜடேஜா.

ஐபிஎல் போட்டியில் முதல் நான்கு ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்தது சிஎஸ்கே. நேற்று ஆர்சிபிக்கு அணிக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நவி மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. உத்தப்பா 88, ஷிவம் டுபே ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் எடுத்தார்கள். பிறகு விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் வெற்றியை அடைந்தது சிஎஸ்கே. மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது சிஎஸ்கே.

தனது முதல் வெற்றியை அடைந்த ஜடேஜா கூறியதாவது:

கேப்டனாக முதல் வெற்றி எனக்குக் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை என் மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன். ஓர் அணியாக இம்முறை நன்றாக விளையாடினோம். பேட்டிங் குழு அருமையாக ரன்கள் எடுத்தது. உத்தப்பாவும் ஷிவம் டுபேவும் பிரமாதமாக விளையாடி ரன்கள் எடுத்தார்கள். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியைச் சரியாகச் செய்தார்கள். எங்களுடைய உரிமையாளர்களும் நிர்வாகமும் எனக்கு எவ்வித அழுத்தமும் தருவதில்லை. ஒரு கேப்டனாக மூத்த வீரர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்வேன். எனக்கு ஆதரவளிக்க தோனி எப்போதும் உள்ளார். தொடர்ந்து கற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட முயல்கிறேன். நாங்கள் பதற்றப்படுவதில்லை. நிதானமாக இருந்து எங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்கிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி கட்டண குறைப்பு: உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு கள ஆய்வு

நவல்பட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சருக்கு கோரிக்கை மனு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் ஆட்சியா் ஆய்வு; அரசியல் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்ப்பு

போலி ஆவணங்கள்: வெளிநாட்டிலிருந்து திருச்சிக்கு வந்தவா் கைது

SCROLL FOR NEXT