ஐபிஎல்

பட்லர் மீண்டும் சதம்: ராஜஸ்தான் 217 ரன்கள் குவிப்பு

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். உமேஷ் யாதவ் முதல் ஓவரை சிறப்பாக வீசி 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். அடுத்த ஓவரிலும் படிக்கல் மட்டுமே ஒரு பவுண்டரி அடித்தார், பட்லர் அடக்கி வாசித்தார். 

உமேஷ் யாதவ் வீசிய 3-வது ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்கத் தொடங்கினார் பட்லர். படிக்கல் மறுமுனையில் வேடிக்கைப் பார்க்க, பட்லர் அதிரடி காட்டினார். பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்தது. பவர் பிளே முடிந்தவுடன் 29-வது பந்தில் அரைசதத்தை எட்டினார் பட்லர்.

நடுஓவர்களிலும் பவுண்டரிகளை பறக்கவிட ராஜஸ்தான் ரன் ரேட் நல்ல நிலையில் இருந்தது. 10-வது ஓவரில் படிக்கல் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 97 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்ட ரன் ரேட் மளமளவென உயர்ந்தது. 15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், ஆண்ட்ரே ரஸல் பந்தில் சாம்சன் (38) ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் 98 ரன்களிலிருந்த பட்லர், சிக்ஸரை பறக்கவிட்டு 59-வது பந்தில் சதத்தை எட்டினார். இந்த சீசனில் இது இவருக்கு இரண்டாவது சதம்.

சதம் அடித்த பட்லர் அதே ஓவரில் பேட் கம்மின்ஸிடம் ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 103 ரன்கள் விளாசினார்.

இதன்பிறகு, சற்று அதிரடி குறைந்தது. ஆனால், ஷிம்ரோன் ஹெத்யமர் வழக்கம்போல் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். குறிப்பாக கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசி இன்னிங்ஸை முடித்தார் ஹெத்மயர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 எடுத்தது. நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவே அதிகபட்ச ஸ்கோர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹெத்மயர் 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார்.

கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும், ஷிவம் மவி, பேட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT