ஐபிஎல்

டெல்லி - பஞ்சாப் ஆட்டம் மும்பைக்கு மாற்றம்

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புதன்கிழமை மோதும் ஆட்டம் புணேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.

DIN

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புதன்கிழமை மோதும் ஆட்டம் புணேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி அணியில் ஆல்-ரவுண்டா் மிட்செல் மாா்ஷ் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், மும்பையிலிருந்து புணேவுக்கு நீண்ட தூர பேருந்து பயணம் காரணமாக அணியினரிடையே அறியாத வகையில் தொற்று பாதிப்பு மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக ஆட்டம் புணேவிலிருந்து மும்பைக்கு இடமாற்றப்படுவதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதையடுத்து மும்பையில் இருந்து செவ்வாய்க்கிழமை புணே புறப்பட இருந்த பஞ்சாப் அணி, மும்பையிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் இருக்கும் டெல்லி வீரா்களுக்கு செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனினும், புதன்கிழமை காலை மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே டெல்லி அணி விளையாட அனுமதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!

நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -நிர்மலா சீதாராமன்

எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

SCROLL FOR NEXT