முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணிக்கு 69 ரன்கள் இலக்கு

சன்ரைசர்ஸ் அணியின் அபார பந்துவீச்சால் பெங்களூரு அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்களில் சுருண்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

சன்ரைசர்ஸ் அணியின் அபார பந்துவீச்சால் பெங்களூரு அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்களில் சுருண்டது. 

ஐபிஎல் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையின் பார்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். 

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டு பிளெஸ்ஸி, அனுஜ் ராவத் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். ராவத் ரன் எதுவும் எடுக்காமலும், டு பிளெஸ்ஸி ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விராத் கோலியும் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். 

பெங்களூரு அணியில் கிளைன் மேக்ஸ்வெல் (12), சுயாஷ் பிரபுதேசாய் (15) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற பெங்களூரு அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்களில் சுருண்டது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன், நடராஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

முழு கட்டுரையைப் படிக்க →