அபிஷேக் சர்மா மற்றும் எய்டன் மார்கிரம் 
ஐபிஎல்

கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்: திடீரென்று வந்து அதிரடி காட்டிய ஷஷான்க்

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

DIN


குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர்.

குஜராத்துக்கு முகமது ஷமி வழக்கம்போல் பந்துவீச்சில் மிரட்டினார். வில்லியம்சன் 5 ரன்களுக்கு ஷமி பந்தில் போல்டானார். தனது அடுத்த ஓவரில் ராகுல் திரிபாதி அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி விளாசினாலும், அதற்கு அடுத்த பந்தில் அவரையும் வீழ்த்தினார் ஷமி.

இருந்தபோதிலும், அபிஷேக் சர்மா மறுமுனையில் பவுண்டரிகள் விளாசியதால், ஹைதராபாத் அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, அபிஷேக் சர்மா மற்றும் எய்டன் மார்கிரம் பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இதனால், ரன் ரேட்டும் சீரான வேகத்தில் உயர்ந்தது. 10 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது.

குஜராத்தின் முக்கியப் பந்துவீச்சாளரான ரஷித் கான் ஓவரிலேயே அபிஷேக் சர்மா விளாசியதால் ஹார்திக் பாண்டியா நெருக்கடிக்குள்ளானார். ரஷித் கான் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட அபிஷேக் 33-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார். மறுமுனையில் மார்கிரமும் அதிரடி காட்டினார்.

இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் 42 பந்துகளில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஷமி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட மார்கிரமும் 35-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார். ஆனால், அபிஷேக் விக்கெட்டுக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கின.

நிகோலஸ் பூரன் 3 ரன்களுக்கும், மார்கிரம் 56 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனால், கடைசி நேரத்தில் அதிரடிக்கு ஆள் இல்லை என்ற நிலை உருவானது. ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனில் முதன்முறையாகக் களமிறங்கிய ஷஷான்க் சிங் யாரும் எதிர்பார்த்திராதவாறு மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் பந்தையே அவர் பவுண்டரியுடன் தொடங்கினார். பிறகு, கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து சிறப்பான முடிவை ஹைதராபாத்துக்கு தந்தார்.

இதனால், கடைசி ஓவரில் மார்கோ யான்சென் அடித்த சிக்ஸர் உள்பட மொத்தம் 25 ரன்கள் விளாசியது ஹைதராபாத்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யான்சென் 8 ரன்களும், ஷஷான்க் சிங் 6 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர்.

குஜராத் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், யஷ் தயால் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT