ஐபிஎல்

ரோஹித் சர்மா பிறந்த நாள்: பரிசளிக்குமா மும்பை இந்தியன்ஸ்?

DIN


நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றிக்குப் போராடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (சனிக்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.

ஐபிஎல்-இல் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதனிடையே, மும்பை கேப்டன் ரோஹித் சர்மா இன்று தனது 36-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். எனவே, ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று, நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவுக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு சீசனில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 8 ஆட்டங்களில் விளையாடி 6-இல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT