கோப்புப்படம் 
ஐபிஎல்

சஹார், மொயீன் அலி இல்லை: சவாலை சமாளிப்பாரா புதிய கேப்டன்? (விடியோ)

சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவுக்கு முதல் ஆட்டத்திலேயே தீபக் சஹார், மொயீன் அலி இல்லாத அணியைத் தேர்வு செய்யும் சவால் வந்துள்ளது.  

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவுக்கு முதல் ஆட்டத்திலேயே தீபக் சஹார், மொயீன் அலி இல்லாத அணியைத் தேர்வு செய்யும் சவால் வந்துள்ளது.  

கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தி வந்த மகேந்திர சிங் தோனி, நடப்பு சீசனிலிருந்து கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தவுள்ள மூன்றாவது கேப்டன் ரவீந்திர ஜடேஜா.

இந்த நிலையில், ஐபிஎல் 2022 முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை இன்று (சனிக்கிழமை) எதிர்கொள்கிறது. அணியின் முக்கிய வீரர்களான தீபக் சஹார், மொயீன் அலி ஆகியோர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால், இவர்கள் இருவரும் இல்லாத அணியைத் தேர்வு செய்ய வேண்டிய சவால் ஜடேஜாவுக்கு முதல் ஆட்டத்திலேயே வந்துள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடப்போகும் உத்தேச அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), மகேந்திர சிங் தோனி, டுவைன் பிராவோ/கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்ன், மகேஷ் தீக்ஷனா, கேஎம் ஆசிஃப்/ஆர் ஹங்கர்கேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி அஞ்சலி!

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்

தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

SCROLL FOR NEXT