முகப்பு
ஐபிஎல்

தில்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னெள பேட்டிங் தேர்வு

முதல் இரண்டு ஓவர்கள் முடிவில் லக்னெள அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்களை எடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
தில்லி, லக்னெள அணி கேப்டன்கள்
பகிர்:

மும்பை வாங்கடே மைதானத்தில் நடப்பு ஐபிஎல் தொடரின் 45ஆவது போட்டி நடைபெற்றுவருகிறது. தில்லி அணிக்கு எதிரான அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னெள அணி கேப்டன் கே. எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

லக்னெள அணியின் வேகபந்து வீச்சாளர் அவேஷ் கானுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் கிருஷ்ணப்பா கௌதமுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தில்லி அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

முதல் இரண்டு ஓவர்கள் முடிவில் லக்னெள அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்களை எடுத்துள்ளது. 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த டி காக்கும் 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த ராகுலும் களத்தில் உள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →