ஐபிஎல்

சுரேஷ் ரெய்னா இல்லை, சிஎஸ்கேவுக்கு பிளேஆஃப் இல்லை!

DIN

2008 முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை இரு ஆண்டுகளில் மட்டுமே பிளேஆஃப்புக்குத் தகுதி பெறவில்லை. (நடுவில் இரு வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் போட்டியில் பங்கேற்கவில்லை.)

2020, 2022

இந்த இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

இந்த இரு வருடங்களிலும் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் விளையாடவில்லை!

சுரேஷ் ரெய்னா விளையாடிய 11 ஆண்டுகளிலும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது சிஎஸ்கே. 

இதில் ஒரு காரணமும் உள்ளது. நல்ல நடுவரிசை வீரராக நிறைய ரன்கள் எடுத்து அணிக்குப் பெரிய பலமாக இருந்துள்ளார் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 11 வருடங்களில் 10 வருடங்களில் 370+ ரன்கள் எடுத்துள்ளார். கடந்த வருடம் தான் குறைந்துவிட்டது. 2021 ஐபிஎல் போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடிய ரெய்னா, 160 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2008 முதல் 2014 வரை எல்லா வருடங்களிலும் குறைந்தது தலா 400 ரன்கள் எடுத்தார். எனில் எந்தளவுக்கு மகத்தான பங்களிப்பை சிஎஸ்கேவுக்கு வழங்கினார் எனப் புரிந்துகொள்ளலாம். 

2020-ல் சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார் ரெய்னா. இதனால் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. அந்த வருடம் சிஎஸ்கே, பிளேஆஃப்புக்கு முதல்முறையாகத் தகுதி பெறவில்லை. கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம்பெற்றார் ரெய்னா. கோப்பையை வென்றது சிஎஸ்கே. ரெய்னாவை இந்த வருடம் ஏலத்தில் சிஎஸ்கே எடுக்கவில்லை. மீண்டும் பிளேஆஃப்புக்கு சிஎஸ்கே தகுதி பெறவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT