ஐபிஎல்

ஐபிஎல் ஓய்வு அறிவிப்பு: ட்வீட்டை நீக்கினார் ராயுடு!

ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ராடுடு ஓய்வு பெறவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். 

DIN

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த சிஎஸ்கே வீரர் அம்பட்டி ராயுடு பிறகு தனது ட்வீட்டை நீக்கியுள்ளார்.

ஐபிஎல் 2022 ஏலத்தில் ராயுடுவை ரூ. 6.75 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே. இந்த வருட ஐபிஎல்-லில் 12 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 271 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 124.31. 

2018-ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வான ராயுடு, 16 ஆட்டங்களில் 802 ரன்கள் எடுத்து பிறகு இந்திய அணிக்கும் தேர்வானார். நூலிழையில் 2019 உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் இதுவே என்னுடைய கடைசி ஐபிஎல் வருடம் என இன்று ட்விட்டரில் தகவல் தெரிவித்தார் ராயுடு. இதனால் சிஎஸ்கே ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தன்னுடைய ட்வீட்டை அவர் நீக்கியுள்ளார். 

சிஎஸ்கேவின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ராயுடு ஓய்வு பெறவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT