ஐபிஎல்

அதிக விக்கெட்டுகள் பட்டியலில் சஹால் மீண்டும் முதலிடம்

மும்பை : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார். 

DIN

மும்பை : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார். 

இந்த ஐபிஎல் 2022 போட்டியில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் இருப்பது தெரிந்ததே. முந்தைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் வனிந்து ஹசரங்கா 23 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். நேற்று நடந்த ஐபிஎல் 63வது போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் 1 விக்கெட் எடுத்து 24 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார். ஊதா நிறத் தொப்பி (பர்பிள் கேப்) தற்போதைக்கு அவரிடமே உள்ளது. 

ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்தது சென்னை அணியின் ப்ராவோ 2013இல் 32 மற்றும் பெங்களுரூ அணியின் ஹர்ஷல் பட்டேல் 2021இல் 32 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் உள்ளனர். 

யுஸ்வேந்திர சஹால் இதை முறியடிப்பாரா இல்லையா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT