ஐபிஎல்

2-வது முறையாக மூன்று பிரபலங்கள் இல்லாத இறுதிச்சுற்று

15 ஐபிஎல் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் 13 முறை மூவரில் ஒருவராவது இடம்பெற்று வந்துள்ளார்கள். 

DIN

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 

ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் சுற்றில் ராஜஸ்தானும் ஆர்சிபியும் நேற்று மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி. 

இதையடுத்து 2014-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று - தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூன்று பிரபலங்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் மூவரும் விளையாடாத 2-வது இறுதிச்சுற்று இது. 15 ஐபிஎல் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் 13 முறை மூவரில் ஒருவராவது இடம்பெற்று வந்துள்ளார்கள். 

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் மூவர் (தோனி - கோலி - ரோஹித்)

2008 - தோனி
2009 - ரோஹித் சர்மா, கோலி
2010 - தோனி
2011 - தோனி, கோலி
2012 - தோனி
2013 - தோனி, ரோஹித் சர்மா 
2014 - கொல்கத்தாவும் பஞ்சாபும் மோதியதால் மூவரும் பங்கேற்கவில்லை
2015 - தோனி, ரோஹித் சர்மா
2016 - கோலி
2017 - தோனி, ரோஹித் சர்மா
2018 - தோனி
2019 - தோனி, ரோஹித் சர்மா
2020 - ரோஹித் சர்மா
2021 - தோனி
2022 - குஜராத்தும் ராஜஸ்தானும் மோதுவதால் மூவரும் பங்கேற்கவில்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

SCROLL FOR NEXT