முகப்பு
ஐபிஎல்

தோனியின் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த சீசனிலேயே பேசினோம்: பிளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த ஐபிஎல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தன்னிடம் பேசியதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:


சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த ஐபிஎல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தன்னிடம் பேசியதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை தோனி கடந்த வியாழக்கிழமை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சனிக்கிழமை எதிர்கொண்ட ஜடேஜா தலைமையிலான சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையடுத்து, தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது குறித்து அவர் விளக்கமளித்தார்.

பிளெமிங் கூறியதாவது:

"கேப்டன் பொறுப்பு குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். கடந்த ஐபிஎல் சீசனின்போது தோனி என்னிடம் பேசினார். ஆனால், எப்போது என்கிற நேரம் தோனியின் முடிவு. அணி மூலம் சீனிவாசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் 100 சதவிகிதம் அதைப் பற்றி பேசினோம். சிறிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிறிய மாற்றம் என்றாலும் அது நன்றாகவே நடந்து முடிந்தது" என்றார் பிளெமிங்.

முழு கட்டுரையைப் படிக்க →