ஐபிஎல்

நாடு திரும்பிய முஸ்தஃபிசூர்: சிஎஸ்கேவுக்கு பின்னடைவு?

வங்கதேசம் திரும்பியுள்ள முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சிஎஸ்கேவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

வங்கதேசம் திரும்பியுள்ள முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் அணியில் இடம்பெற்ற முஸ்தஃபிசூர், எதிரணியினரை தனது பந்துவீச்சால் திணறடித்து வருகிறார். கடினமான சூழலில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.

அணியின் டெத் பவுலராக பதிரனாவுடன் இணைந்து எதிரணியினர் கடைசி நேரத்தில் ரன்கள் குவிக்கும் யுத்தியை தகர்த்து வருகிறார். 7 விக்கெட்டுகள் கைப்பற்றி பவுலர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில், ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க விசா ஆவணங்கள் பணிகளுக்காக நேற்றிரவு வங்கதேசத்துக்கு திரும்பியுள்ளார்.

இதனால், சன் ரைசர்ஸ் அணியுடனான வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறுகையில், “வங்கதேசத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்காக கைரேகை வைக்கும் பணிக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்பியுள்ளார். நாளை(ஏப்.4) கைரேகை வைத்த பிறகு அவர் மீண்டும் இந்தியா திரும்பிவிடுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் அணியுடனான போட்டியை தவறவிடும் முஸ்தஃபிசூர் மீண்டும் அணியில் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT