குல்தீப் யாதவ்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

குல்தீப் யாதவுக்கு ஓய்வளிக்க தில்லி கேப்பிடல்ஸ் முடிவு!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து தில்லி கேப்பிடல்ஸ் வீரர் குல்தீப் யாதவுக்கு ஓய்வளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

DIN

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குல்தீப் யாதவுக்கு ஓய்வளிக்க தில்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் குல்தீப் யாதவுக்கு காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் தோல்வியைத் தழுவியது. அதன்பின் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் குல்தீப் யாதவுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குல்தீப் யாதவுக்கு ஓய்வளிக்க தில்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு குல்தீப் யாதவுக்கு சிறிது ஒய்வு தேவைப்படுகிறது. அவர் தற்போது போட்டியில் விளையாடும் அளவுக்கு முழு உடல்தகுதியுடன் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT