-
ஐபிஎல்

தோல்விக்கு காரணம் இதுதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்ததுக்கு காரணம் கூறியுள்ளார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.

DIN

ஹைதராபாத்தில் நடைபெற்ற நேற்றையப் (ஏப்.5) போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை முதலில் பேட் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் இது 2வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியதாவது:

உண்மையை சொல்ல வேண்டுமானால் இது மிகவும் மெதுவான பிட்ச். நாங்கள் முதலில் நன்றாகவே பேட்டிங் செய்தோம். ஆனால் எதிரணியினர் 2ஆம் பாதியில் சிறப்பாக பந்து வீசினார்கள். மேலும் பவர்பிளேவில் அதிகமாக ரன்களை குவித்தார்கள். நாங்கள் ஒரு கேட்ச் தவறவிட்டோம், ஒரு ஓவரில் அதிகமான ரன்களை வழங்கி விட்டொம். 170-175 ரன்கள் அடித்திருந்தால் நல்ல டார்கெட்டாக இருந்திருக்கும். இறுதியில் சிறிது ஈரப்பதம் தென்பட்டது. இருப்பினும் 19வது ஓவர் வரைக்கும் எடுத்து சென்றது சிறப்பன விசயமே. மொயின் அலி சிறப்பாக பந்து வீசினார். 15-16ஆவது ஓவரிலும் அவர் வீசிய பந்துகள் திரும்பியது. கருப்பு நிற ஆடுகளம் மெதுவாக இருக்குமென கணித்தோம்;ஆனால் அது மிக மெதுவாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய நாடகப் பள்ளி மூலம் கோமல் தியேட்டரின் ‘திரெளபதி’ நாடகம் தோ்வு

காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவா்களின் 28-ஆவது மாநாடு: தில்லியில் ஜன. 15-இல் பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்!

ஜன நாயகன் திரைப்பட விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

பால்ஸ்வா குப்பைக் கிடங்கு பகுதியில்3 மாதங்களில் 4.5 ஏக்கா் நிலம் மீட்பு: எம்சிடி தகவல்

காணாமல் போன 4 வயது சிறுமி இறந்த நிலையில் வடிகாலில் மீட்பு

SCROLL FOR NEXT