கிளன் மேக்ஸ்வெல்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

பேட்டிங்கில் தடுமாறும் ஆர்சிபி வீரர்கள்: ஆர்சிபி பயிற்சியாளர்

விராட் கோலி தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறுவதாக பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.

DIN

விராட் கோலி தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறுவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானின் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் விராட் கோலி சதமடித்த போதிலும், பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், விராட் கோலி தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறுவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இதுவரை நாங்கள் விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். இதுபோன்ற சூழலில் இருப்பதை எந்த ஒரு அணியும் விரும்பாது. எங்களது பேட்டிங்கில் சில பிரச்னைகள் உள்ளன. விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். மற்ற வீரர்கள் ரன்கள் குவிக்கத் தடுமாறி வருகிறார்கள். அவர்கள் தன்னம்பிக்கையுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.

நேற்றையப் போட்டியில் விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT