மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் இளம் வீரர்!

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய விஷ்ணு வினோத்துக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் மாற்று வீரரை அறிவித்துள்ளது.

DIN

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய விஷ்ணு வினோத்துக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் மாற்று வீரரை அறிவித்துள்ளது.

விஷ்ணு வினோத்துக்குப் பதிலாக சௌராஷ்டிர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹார்விக் தேசாய் மும்பை அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஐபிஎல் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: விஷ்ணு வினோத்துக்குப் பதிலாக ஹார்விக் தேசாய் அணியில் மாற்று வீரராக இணைவதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 வயதாகும் ஹார்விக் தேசாய் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். இதற்கு முன்பாக, 27 டி20, 40 லிஸ்ட் ஏ மற்றும் 46 முதல் தர போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT