படங்கள்: எக்ஸ்
ஐபிஎல்

அம்பயர் இந்தியன்ஸ்?: கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

சமூக வலைதளங்களில் நடுவர்களை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

DIN

சமூக வலைதளங்களில் நடுவர்களை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பவுண்டரி சென்ற பந்தினை மும்பை இந்தியன்ஸ் வீரர் பிடிக்கும்போது எல்லைக் கோட்டினை தொடுவார். தினேஷ் கார்த்திக்கு இடுப்புக்கு மேலே வரும் பந்தினை நோ பால் இல்லை என்பது உள்பட பல தவறான தீர்ப்புகளை நடுவர்கள் வழங்கினார்கள்.

இதனால் ரசிகர்கள் நடுவர்களை ‘அம்பயர் இந்தியன்ஸ்’ என்று விமர்சித்தார்கள். சமூக வலைதளங்களில் இதனை மீம்ஸ்களாக அதிகம் பதிவிட்டார்கள்.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியை நடுவர்கள் பல முறை சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதால் ஐபிஎல் ரசிகர்கள் அம்பயர் இந்தியன்ஸ் என்று அழைப்பது வழக்கம். நேற்றையப் போட்டியில் இப்படி நடக்கவே ஆர்சிபி மற்றும் பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக அள்ளி தெளித்தார்கள்.

இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிசிசிஐ இடம் கோரிகை வைத்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

SCROLL FOR NEXT