எம்.எஸ்.தோனி படம் | ஐபிஎல்
ஐபிஎல்

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் 20-வது ஓவரில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

மும்பைக்கு எதிரான இந்தப் போட்டியில் 20 ரன்கள் எடுத்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 ஆயிரம் ரன்கள் குவித்த இரண்டாவது வீரராக அவர் மாறினார். இதுவரை சிஎஸ்கேவுக்காக 250 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி 5016 ரன்கள் குவித்துள்ளார்.

5529 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT