சாய் கிஷோர் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

அச்சமின்றி விளையாட ஊக்கமளிக்கும் ஆஷிஷ் நெஹ்ரா: சாய் கிஷோர்

அச்சமின்றி விளையாட ஆஷிஷ் நெஹ்ரா ஊக்கமளிப்பதாக குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.

DIN

அச்சமின்றி விளையாட ஆஷிஷ் நெஹ்ரா ஊக்கமளிப்பதாக குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில், அச்சமின்றி விளையாட ஆஷிஷ் நெஹ்ரா ஊக்கமளிப்பதாக சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் 20-25 நாட்களுக்குப் பிறகு விளையாடினேன். அதனால், போட்டியில் மகிழ்ச்சியுடன் எனது 120 சதவிகித உழைப்பை கொடுக்க விரும்பினேன். அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா சிறப்பான சூழலை அணிக்குள் உருவாக்கியுள்ளார். அச்சமின்றி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் ஊக்கமளிக்கிறார். அவர் என்னை சுதந்திரமாக விளையாடக் கூறினார் என்றார்.

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT