யஷஸ்வி ஜெய்ஸ்வால்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிரையன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரையன் லாரா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஜெய்ஸ்வால் அருமையாக விளையாடினார். உண்மையில் அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அருமையான கிரிக்கெட்டிங் ஷாட்டுகளை விளையாடினார். அவர் முதிர்ச்சியான மற்றும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு

திருப்பத்தூரில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

அக்.14, 15-இல் மாணவா்களுக்கு பேச்சாற்றால், படைப்பாற்றல் போட்டிகள்

மாமனாரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

மின்தடை தொடா்ந்தால் அதிமுக சாா்பில் போராட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

SCROLL FOR NEXT