அக்‌ஷர் படேல்
அக்‌ஷர் படேல் Kamal Kishore
ஐபிஎல்

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

DIN

ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இம்பாக்ட் பிளேயர் விதிமுறை கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை எதிர்க்கும் விதமாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆர்சிபி வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

நேற்றையப் போட்டியில் 66 ரன்கள், 1 விக்கெட் எடுத்த தில்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் அக்‌ஷர் படேல், “ஒரு ஆல்ரவுண்டராக இம்பாக்ட் பிளேயர் விதிமுறையினால் ஆல்ரவுண்டர்களின் நிலைமை ஆபத்தில் உள்ளதாக நினைக்கிறேன். அணியின் தேவைக்கேற்ப 6 பேட்டர்கள் அல்லது 6 பௌலர்களாக களமிறங்க நினைக்கிறார்களே தவிர ஆல்ரவுண்டருடன் செல்ல விரும்புவதில்லை.

நான் பேட்டிங் ஆர்டரில் 3ஆவது இடத்தில் களமிறங்குவேன் என நினைக்கவில்லை. குஜராத்தில் 3 ஸ்பின்னர்கள் இருப்பதால் என்னை அனுப்ப முடிவெடுத்தனர். பின்னர் ரிஷப் பந்த்தும் விளையாட விரும்பினார். பின்னர் நாங்கள் கலந்தாலோசித்து இந்த முடிவினை எடுத்தோம். பந்தின் வேகத்தினை மாற்றுவது எனக்கு பெரிய மாற்றத்தினை கொடுத்துள்ளது. மெதுவான பந்துகள் மீது தற்போது எனக்கு நல்ல நம்பிக்கை பிறந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT