படம் | ஐபிஎல்
படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

DIN

சன் ரைசர்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்த இணை அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், டு பிளெஸ்ஸி 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் களமிறங்கிய வில் ஜாக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தனர்.

ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

விராட் கோலி

அதன்பின் களமிறங்கிய மஹிபால் லோம்ரோர் (7 ரன்கள்), தினேஷ் கார்த்திக் (11 ரன்கள்) மற்றும் ஸ்வப்னில் சிங் (12 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் கேமரூன் கிரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது. சன் ரைசர்ஸ் தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நடராஜன் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் மற்றும் மயங்க் மார்க்கண்டே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT