படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர். டி காக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

தீபக் ஹூடா

அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். நிக்கோலஸ் பூரன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கே.எல்.ராகுல் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஆயுஷ் பதோனி 18 ரன்களுடனும், க்ருணால் பாண்டியா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிரண்ட் போல்ட், ஆவேஷ் கான் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT