முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி படம்: பஞ்சாப் கிக்ஸ் / எக்ஸ்
ஐபிஎல்

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

பஞ்சாப் கிங்ஸ் அணி எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே அணியை விரைவில் சந்திப்போம் எனக் கூறியுள்ளது.

DIN

ஐபிஎல் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வெள்ளிக்கிழமை இரவு வென்றது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 18.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் விளாசி வென்றது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமான சேஸிங் வெற்றியை இந்த ஆட்டத்தின் மூலம் பதிவு செய்து சாதனை படைத்தது பஞ்சாப்.

இந்த வெற்றிக்கு சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில், “523 ரன்கள், 42 சிக்ஸர்கள். உலக விளையாட்டிலிருந்தே தனித்திருக்கிறது” என முதல்வன் படத்தில் மணிவண்ணன் வியந்து பார்க்கும் புகைப்படத்தினை பதிவிட்டது.

இதற்கு பதிலளித்த பஞ்சாப் கிங்ஸ் அணி அதே முதல்வன் பட அர்ஜுன் பாணியில், “நன்றி. விரைவில் சந்திப்போம்” எனக் கூறியுள்ளது.

சிஎஸ்கேவுடன் பஞ்சாப் அணி மே.1ஆம் தேதி மோதுகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT