முகப்பு
ஐபிஎல்

ஆர்சிபி பயிற்சி முகாமில் இணைந்த ஆகாஷ் தீப்!

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க சில நாள்களே உள்ள நிலையில் ஆர்சிபியின் பயிற்சி முகாமில் மேலும் 3 வீரர்கள் இணைந்தனர்.

Updated On : 15 மார்ச், 2024 at 4:22 PM
ஆகாஷ் தீப்
பகிர்:

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க சில நாள்களே உள்ள நிலையில் ஆர்சிபியின் பயிற்சி முகாமில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் உள்பட 3 பேர் இணைந்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்ளே ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அசத்திய ஆகாஷ் தீப், சிவப்பு மற்றும் தங்க நிற சீருடையில் (ஆர்சிபி ஜெர்சியில்) மாயாஜாலம் செய்ய தயாராகவுள்ளார். ஆகாஷ் தீப்பின் வருகையால் ஆர்சிபியின் பயிற்சி முகாம் மேலும் ஆழமாகியுள்ளது எனப் பதிவிட்டுள்ளது.

Advertisement

கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஆகாஷ் தீப் 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.