போட்டிக்குப் பிறகு... வைபவ் சூர்யவன்ஷியின் கழுத்தை நெரித்த ஆர்சிபி கேப்டன்!
நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் இளம் வீரரிடம் நடந்துகொண்ட விதம் குறித்து...
ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் போட்டிக்குப் பிறகு ஆட்ட நாயகன் விருது வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரின் கழுத்தை நெரித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
குவாஹாட்டியில் நேற்றிரவு மழையின் காரணமாக போட்டி தாமதமாக நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 201/8 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் 18 ஓவர்களில் 202/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் ஓவரில் தொடர்ச்சியாக 4,4,4,6 என அடித்து மிரள வைத்தார்.
Advertisement
Advertisement
ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரரான புவனேஷ்வர் குமார் ஓவரிலும் தொடர்சியாக 2 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். தனியாளாக ஆர்சிபியின் வெற்றிக்கனியைப் பறித்துச் சென்றார்.
போட்டிக்குப் பிறகு இவரைச் சந்தித்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் செல்லமாக இவரது கழுத்தை நெரித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் ஆர்சிபிக்கு இந்த சீசனில் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Rajat Patidar meeting Vaibhav Suryavanshi after the match nearly try to kill.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.