ருதுராஜ் கெய்க்வாட் படம்: சிஎஸ்கே/ எக்ஸ்
ஐபிஎல்

தலைமை குறித்து மனம் திறந்த ருதுராஜ் கெய்க்வாட்!

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

DIN

ஐபிஎல் தொடர் தொடங்கும்முன் கோப்பையுடன் ஒவ்வொரு அணி வீரர்களும் புகைப்படம் எடுப்பது வழக்கம். அதன்படி சிஎஸ்கே சார்பாக தோனி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றுள்ளார். பின்னர் சிஎஸ்கே நிர்வாகம் ருதுராஜை கேப்டனாக நியமித்துள்ளது கூறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டது.

2019 முதல் சென்னை அணியில் விளையாடும் ருதுராஜ் இதுவரை 52 போட்டிகளில் விளையாடி 1797 ரன்கள் எடுத்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.

அதில் ருதுராஜ் கெய்கவாட் கூறியதாவது:

மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைவிடவும் கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதை அறிகிறேன். கேப்டன்சி பொறுப்பை ஏற்றிக்கொள்ள தயாரக இரு என கடந்த ஆண்டே எனக்கு தோனி தெரிவித்திருந்தார். ஏனெனில் திடீரெனக் கூறினால் அது எனக்கு வியப்பாக இருக்கக்கூடாது என்பதால் முன்பே தெரிவித்திருந்தார். ஒரு வாரம் முன்பு இதை நேரடியாகக் கூறினார். அதற்கு முன்பு சில பயிற்சி ஆட்டங்களில் என்னை கேப்டனாக நிற்க வைத்தார். எனக்கு உதவியாக தோனி, ஜடேஜா, ரஹானே போன்ற சீனியர்கள் இருக்கிறார்கள். நான் அணியில் எதையும் புதியதாக மாற்ற வேண்டியதில்லை. அவரவர்கள் சுதந்திரமாக விளையாடினாலே போதும்.

தோனி என்னை தலைமைப் பண்பில் நம்பியது மிகப் பெரியது. எனக்கு எந்த கவலையும் இல்லை. மகிழ்ச்சியுடன் விளையாட காத்திருக்கிறேன் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளத்தில் 10-15% பிடித்தம்: தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை

எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிவித்த ஆஷியானா ஹவுசிங்!

இரவில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வந்தான் எனை வென்றான்... தர்ஷு சுந்தரம்!

SCROLL FOR NEXT