ஆண்ட்ரே ரஸல் படம் | AP
ஐபிஎல்

சிக்ஸர் மழை பொழிந்த ரஸல்; ஹைதராபாத்துக்கு 209 ரன்கள் இலக்கு!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். பில் சால்ட் தவிர டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. சுனில் நரைன் (2 ரன்கள்), வெங்கடேஷ் ஐயர் (7 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (0 ரன்), நிதீஷ் ராணா (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

பந்தை சிக்ஸருக்கு விளாசும் ஆண்ட்ரே ரஸல்

அவரைத் தொடர்ந்து ரமன்தீப் சிங் அதிரடியாக 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடியது. அதிரடியாக விளையாடிய ரஸல் சிக்ஸர் மழையைப் பொழிந்தார். அவர் 20 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஆண்ட்ரே ரசல் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பாஜகஉறவு முறிந்தது! கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவிப்பு!-பண்ருட்டி ராமச்சந்திரன்

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT